Super Team

எம்மைப்பற்றி

பிராக்டிகல் அக்சன் பற்றி

பொருளியலாளரும் “சிறியது அழகானது” என்ற  நூலின் ஆசிரியருமாகிய டாக்டர் சூமாக்கர் அவர்களின் தலைமையில் ஒரு சிறிய குழுவினரால் ப்றக்டிக்கல் எக்சன் இடைநிலைத் தொழில்நுட்ப அபிவிருத்திக் குழு என்ற பெயரில் 1966ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அன்றிலிருந்து ப்றக்டிக்கல் எக்சன் பலமடையத் தொடங்கி தற்போது உலகளாவிய ரீதியில் பங்களாதேஷ், கென்யா, நேபாளம், இலங்கை, சூடான், ஸிம்பாப்வே ஆகிய ஏழு நாடுகளில் தனது காரியாலயங்களை நிறுவி இயங்கி வருகிறது.

இந்த உலகத்தை வறுமையற்ற மற்றும் நீதியானதாக  மாற்றி அங்கே சகலருக்கும் நன்மை பயக்கக்கூடிய தொழில் நுட்பத்தைப் பிரயோகிக்கின்ற தூரநோக்குடன் அபிவிருத்திக்கான தனித்துவமான ஒரு அணுகுமுறையுடன்  பணியாற்றி வருகிறது. இந்தக் கருவி சாதாரணமானதாகவும் இலகுவானதாகவும் இருக்கலாம். ஆனால் தமக்கென தொழில்நுட்பங்களை வடிவமைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் உள்ளூர் மக்களின்  கைகளிலேயே இருக்க வேண்டிய நீண்ட கால, பொருத்தமான மற்றும் நடைமுறையிலுள்ள விடைகளை வழங்குகின்றது.

சரியான எண்ணக்கருத்துக்கள் சிறியவையாயினும் வாழ்க்கையை மாற்றக்கூடியவை  என  ப்ற்க்டிக்கல் எக்சன் நம்புகிறது. அது மக்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்துகிறது, ஆரோக்கியத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துகிறது, மற்றும் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு மக்களுக்கு உதவுகிறது.  அதனாலேயே சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு  மக்களுக்கு ஆற்றலை வழங்கக்கூடிய  திறன் மற்றும் தொழில்நுட்பங்களை  விருத்தி செய்வதற்காக மக்களுடன் இணைந்து பணியாற்றிக்கொண்டு வந்துள்ளது.

ப்றக்டிக்கல் எக்சனின் அணுகுமுறைகள் உண்மையில் தனித்துவமானவை. நாம் நான்கு முக்கிய பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். 

 • இயற்கை அனர்த்தம், இனமோதல் மற்றும் சுற்றாடல் அழிவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட வறிய மக்களின் துக்ககரமாகவே அதிகரித்துக்கொண்டிருக்கும் நலிவுறுந்தாக்கங்களைக் குறைப்பதற்கு உதவதல்.
 • உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை மேம்படுத்தி,  பதனிட்டு,  சந்தைப்படுத்துவதற்கு உதவுவதன் மூலம்  வறிய மக்கள் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுதல்.
 • பாதுகாப்பானதும் சுத்தமானதுமான நீர், உணவு, குடியிருப்புக்கள் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை சேவைகளை வறிய மக்கள் பெற்றுக்கொள்வதற்கு  உதவுதல்.
 • வறிய மக்கள் நவீன தொழில்நுட்பங்களைச் சமாளித்து, வாழ்க்கையை நிரந்தரமாகவே மாற்றக்கூடிய இலகுவான சிறந்த தொழில்நுட்பங்களைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுதல்.

எதனை முன்னெடுக்கின்ற போதிலும் ப்றக்டிக்கல் எக்சன் ஆகிய நாங்கள்  மக்கள் வாழ்க்கைக்கான சிறந்த, நீடித்த  மாற்றத்தையே கொண்டு வருகின்றோம்.

ப்றக்டிக்கல் எக்சன் பிராந்தியக் காரியாலயம் (இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்)

இலங்கையைத் தளமாகக்கொண்ட ப்றக்கடிக்கல் எக்சன் தெற்காசிய நிகழ்ச்சித்திட்டத்தின்ஒரு கருத்திட்டமே ஜனதாக்ஷன் ஆகும்.உலகில் இந்தப் பகுதியுடனான ப்றக்கடிக்கல் எக்சனின் தொடர்பு 25 வருடங்களுக்குமுன்னர் தொழில்நுட்பம் மற்றும் நலிவுற்ற சமூகங்கள் பற்றிய விடயங்களுடன்; ஆரம்பித்தது. ஆனால் காரியாலயங்கள் 17 வருடங்களுக்கு முன்னரே சம்பிராதயமாக ஸ்தாபிக்கப்பட்டன.

மாற்றீட்டுச் சக்தித் தெரிவுகள் மற்றும் உணவு பதனிடல் முதலியவற்றுடன் ஆரம்பித்து தற்போது நீர் பாதுகாப்பு, மாற்றீட்டுச் சக்தி, போக்குவரத்து மற்றும் மீன்பிடித் துறையைப் பலப்படுத்தல், பல்லின விவசாய உற்பத்தித் தெரிவுகள், சமூக ஆட்சி, கிராமிய வர்த்தக நிலையங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அனர்த்த முகாமைத்துவத்தைத் தரமுயர்த்துதல் போன்ற சமூகத்திற்கான பல்வேறு துறைகளுடன் பணியாற்றிவருகிறது.

ஜனதாக்க்ஷன் பற்றி

ஜனதாக்க்ஷன் என்பது இலங்கையில் உள்ள தெற்காசியாவுக்கான பிரக்டிகல் அக்சன் நிறுவனத்தின் ஒரு செயல்திட்டமாகும் .

ஜனதாக்க்ஷன் திட்டமானது மக்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறைக்கு சத்தியமான பதில்களை வழங்கி வருகிறது. அதனால் அம்மக்கள் சிறந்த தொழில் நுட்ப திறமை மற்றும் அறிவுகளை பெற்று தமது வாழ்க்கை தரத்தை உயர்த்த முடிகிறது. இத்திட்டமானது விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி, இயற்கை வள முகாமைத்துவம், வீடமைப்பு, மீன்பிடி, நகர்ப்புற ஏழைகள் மற்றும் போக்குவரத்து போன்றவை தொடர்பான பொருத்தமான தொழில் நுட்பம் மற்றும் கொள்கைகள் தொடர்பான தகவல்களை வழங்கி வருகிறது.இலங்கையில் உள்ளவேறுஇணைய அடிப்படையிலான சேவை வழங்குனர்களை விட ஜனதாக்க்ஷன் வேறுபட்டு காணப்படுவதற்கான சில பிரத்தியேகஅம்சங்கள், கீழேபட்டியலிடப்பட்டுள்ளன.

 • தனிப்பட்ட விசாரணைகளுக்கு ஏற்ற வகையில் இணைய தகவல்கள் வழங்கப்படுகின்றது
 • பிரத்தியேக சேவை மற்றும் பொருத்தமான தகவல்களே வழங்கப்படுகிறது
 • பல்வேறு துறைகளைச்சேர்ந்த வல்லுனர்களுடன் இணைக்கின்றோம்
 • இணையத்தில் இல்லாத போதும் அமைப்புக்கள் மற்றும் வளங்களை பெறமுடியும்
 • தொழில்நுட்ப கேள்விகளுக்கு விடைகள் உள்ளூர் மொழிகளிலேயே கிடைக்கின்றன
 • தொழில்நுட்ப தகவல் ஆனது சக்தி, வீட்டு வசதி, கழிவு முகாமைத்துவம், இயற்கை வள முகாமைத்துவம் மற்றும் பலவகையானவை தொடர்பாக கிடைக்கின்றது
 • தொழில்நுட்ப தகவல்களை இலகுவில் விளங்கிக்கொள்ளும் வகையில் குறுந்தட்டு, தொழில் நுட்ப சுருக்கம், மற்றும் ஒளி வடிவிலும் பெற்றுக்கொள்ளலாம்.
 

எங்களை தொடர்புகொள்ள

ஜனதக்க்ஷன் நிகழ்ச்சித்திட்டம்

பிரக்டிகல் அக்சன் பிராந்திய காரியாலயம் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்),

இல 05, லயனல் எதிரிசிங்க மாவத்த, கொழும்பு -5,

இலங்கை.

 

தொலை : 94-11-2829412

தொலை நகல்: 94 - 112856188

மின்னஞ்சல் : janathakshan@practicalaction.org.lk